Thursday, November 25, 2010

ராஜா கைய வைச்சா ..... ராங்கா போனதில்ல....

இப்பொழுது பாருங்கள்.... அரசியல் ராஜாக்களும், பிசினஸ் ராஜாக்களும் அரங்கேற்றிய  நாடகத்தின் இடைவேளையில் இருக்கிறோம்.. ராஜா உண்மையிலேயே ராஜாவா.. அல்லது ராஜாவின் முகமூடியா என்று தெரியவேண்டிய ஆவலில் இருக்கிறோம்..

Sunday, November 21, 2010

வலையில் வசப்பட்ட மீன்கள்



இணையம் என்பது இன்று தவிர்க்கவியலாத விசயமாக் மாறிக்கொண்டு வருகிறது. இந்த மாயவலை நம்மைச் சுற்றி நாம் அறியாவண்ணம் நெய்தெடுக்கப்படுகிறது. இணையத்தைப் பற்றிய ஒரு நையாண்டி கவிதை. 
 

சிறுபான்மை ஒதுக்கீடு

உறுத்தலுள்ள காதுகள்
ஒவ்வொன்றாய் பறிக்கையில்
சிறகுகள் எனக்கு
சிரமமாய்த் தெரிகிறது

அஹிம்சை....


அடிக்காதே, வெட்டாதே என்றார்..
யாரந்த அஹிம்சா மூர்த்தி என்று
திரும்பிப் பார்த்தேன்..
இஞ்செகஷனோடு நின்றிருந்தார்
இன்றைய காங்கிரஸ்காரர்

‌‌

Tuesday, November 16, 2010

அவள்... அன்று...அது...



வலிந்து புனையப்பட்ட
காதலால்
வண்ணங்கள் வெளுத்துப்போன வாழ்வில்
சவுந்தர்யங்களை  தேடிக் களைக்கிறேன்...
 
காயங்களும் அது தந்த வலிகளும்
ஏமாற்றப்பட்டதை எழுதிக்காட்டி
ரணத்தை இன்னும் அதிகமாய் காட்டின...

அலுப்புகளின் முடிச்சுகளையெல்லாம்
அவிழ்த்தெறிந்து
ஆயிரமாய்
பட்டாம்பூச்சி எண்ணங்களை பறக்கவிட்டு
கிறங்கி நின்ற நாட்களெல்லாம்
"அன்றொருநாள்....."
என்று தொடங்கும் கதையாகிப்போனது....

இன்று
உள்ளங்கையை விரிக்கும்போது
உயிரற்ற பட்டாம்பூச்சி சிறகுகள் மட்டுமே
பெருமூச்சு காற்றில் சிதறிப் பறக்கின்றன ...

அம்மா





உன்னை வரைய எத்தனிக்கும் போதெல்லாம் 
எனது பென்சில்
விரிந்து பரந்த விண்ணையே வரைந்தன
தூரத்தில் சிறு விண்மீனாய் நானும்..
உனது குரலை பாட நினைக்கும் போதெல்லாம்
சமுத்திரக்காட்டின் ஓவென்ற இரைச்சலே
காதை நிறைக்கிறது
மூலையில் சிறு மீனின் பாடலாய் எனது பாடலும்..        

புள்ளிகளை சேர்த்தேன் நான், கோலம் வந்தது
பூக்களை சேர்த்தேன் நான், மாலை வந்தது
வார்த்தைகளை சேர்த்தேன் நான், பாடல் வந்தது
வண்ணங்களை சேர்த்தேன் நான், வானவில் வந்தது
இவை அத்தனையும் சேர்த்தேன் நான்......
அம்மா நீ வந்தாய்

ஹர்த்தால்

 
இன்று
அலுவலகத்திற்கு வெளியே
வேலை நிறுத்தம்

பாண்டுரங்கன் பதறிப்போனார்

சில கேள்விகள் நம்மை நோக்கி கேட்கப்பட்டதாய்  இருக்காது.. என்றாலும் வெளியே சொல்ல இயலாத பதில்கள் நம்மிடம் இருப்பதால் பதட்டம் நமக்கு வரலாம் தானே
 

சங்கமம்

Indiae

indiae.in
we are in