Thursday, November 25, 2010

ராஜா கைய வைச்சா ..... ராங்கா போனதில்ல....

இப்பொழுது பாருங்கள்.... அரசியல் ராஜாக்களும், பிசினஸ் ராஜாக்களும் அரங்கேற்றிய  நாடகத்தின் இடைவேளையில் இருக்கிறோம்.. ராஜா உண்மையிலேயே ராஜாவா.. அல்லது ராஜாவின் முகமூடியா என்று தெரியவேண்டிய ஆவலில் இருக்கிறோம்..
ஆனால் அதையெல்லாம் சொல்லவேண்டும் என்ற கட்டாயமில்லை, கொள்கை முடிவு என்று சொல்லி ஊத்தி மூடிவிடலாம் என்ற கணக்கில் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய மன்னர்கள் இருக்கிறார்கள்.. 1.74 லட்சம் கோடி இழப்பு என்கிறார்கள். அது அப்படியல்ல.. இழப்புதான்  1.74 லட்சம் கோடி ஆனால் நாங்கள் வாங்கியது கொஞ்சம் தான் என்று சமாதானம் சொல்கிறார் தமிழினத் தலைவர். இவ்வளவு பெரிய தொகையும் அதன் கணக்குகளும் தன்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது என்ற காரணத்தினால் ரஜினியின் படத்தை ரசித்து பார்ப்பதைப் போல் இதையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஆற்று நீரில் இறக்கிவிட்டால் ஆசை தீர குளிக்கலாம், ஆர்ப்பரிக்கும் கடல் அலையில் அமுக்கிவிட்டால் என்னதான் செய்ய இயலும்! அதிர்ஷ்டம் இருந்தால் பிழைத்துக்கொள்வோம், நம்மால் செய்வதற்கு ஏதுமில்லை என்ற முடிவில் பொதுஜனம் இருக்கிறார்.  எப்படி சினிமா தன்னுடைய பிரமாண்டத்தால் நம்மை விழுங்கி பம்மாத்து கட்டுகிறதோ, அதைப்போலவே  அரசியலும் இப்பொழுதெல்லாம் பிரமாண்டமான,  நமது எளிய அறிவிற்கு எட்டாத விஷயம். அதனால்தான் வாக்காளன் தனக்கு கிடைத்தவரை ஆதாயம் என்று காசு வாங்கி ஓட்டு போடுகிறான். வாக்குசீட்டுகளை வென்ற கட்சிகளே இருக்கின்றன. வாக்காளர் மனங்களை வென்ற கட்சிகள்  ஏதும் இல்லை.  இன்னொரு சுதந்திரத்திற்கு போராடவேண்டிய அவசியத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.....

2 comments:

Unknown said...

No more positive solution for eradicating corruption. We have redefine our political setup

Paji said...

Kokila: //No more positive solution for eradicating corruption. We have redefine our political setup//

Thank you very much for your visit and feedback. The redefing process will not be possible in a short period.

Post a Comment

உங்கள் கருத்துக்களால் இப்பதிவு முழுமை பெறட்டும். ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போகலாமே!

சங்கமம்

Indiae

indiae.in
we are in